ஹரியானாவில் பயங்கரம்.. கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து.. குழந்தை உட்பட 6 பேர் உடல் கருகி பலியான சம்பவம்..!



terrible-in-haryana-gas-cylinder-explosion-accident-6-p

ஹரியானா மாநிலம் பானிபட் அருகே தெஹ்சில் கேம்ப் பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பில் சமையல் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீயானது பரவியது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும், தீயணைபப்பு துறைக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயானது மளமளவென பற்றி எரிந்ததில் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் நாசமாகின.

haryana

இந்நிலையில் இந்த கோர தீ விபத்தில் அப்துல் கரீம் அவரது மனைவி அப்ரோசா, இஷ்ரத் கதும், ரேஷ்மா, அப்துல் ஷகூர், மற்றும் அஃபான் ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.