தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்.. இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழு, கேரளா மாநிலத்தில் உள்ள ஆழப்புழா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களின் எஸ்யுவி காரில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் கார் அதிகாலை 3 மணியளவில் கூகுள் மேப்ஸ் உதவியுடன் குறப்பந்தாரா பகுதியில் பயணம் செய்துள்ளது. அச்சமயம் கார் குறுக்கே இருந்த கால்வாயின் மீது பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
காரில் இருந்த ஒருவர் அதிஷ்டவசமாக வெளியேறி அப்பகுதி மக்களை உதவிக்கு அழைத்ததன் பேரில், அவர்கள் விரைந்து வந்து நால்வரை பத்திரமாக மீட்டனர். மேலும், சிலமணிநேரத்திற்கு பின்னர் கார் வெளியே எடுக்கப்பட்டது.
கூகுள் மேப்பை பயன்படுத்தி இவர்கள் பயணத்தை தொடர்ந்த நிலையில், மழை காரணமாக கால்வாயில் நீர் செல்வது தெரியாமல் தொடர்ந்து வாகனம் இயக்கப்பட்டபோது விபத்து நடந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இன்றி அனைவரும் தப்பினர்.
இதையும் படிங்க: கேக் பிரியர்களா நீங்கள்?.. பிரபல பேக்கரியில் பூஞ்சையுடன் சாப்பிட வழங்கப்பட்ட கேக்..!