தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், பசுபள்ளி பகுதியில் வசித்து வருபவர் நாகேந்திர பாரத்வஜா. இவரின் மனைவி மாதுலதா. தபதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
மனைவி கொடூர கொலை
இந்நிலையில், தம்பதிகள் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், இன்று தனது மனைவியை கொடூரமாக நாகேந்திரா கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: "எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?!
ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்தவர், அதனை மறைக்க மனைவியின் உடலை துண்டு துண்டாக அறுக்க முயற்சித்துள்ளார். அதுவும் பலமில்லாத காரணத்தால், கியாஸ் கசிவில் மனைவி பலியானதாக நம்பவைக்க முயற்சிகள் நடந்துள்ளது.
உடலை கூறுபோடும் முயற்சிகள் தோல்வி
இவை அனைத்தும் தோல்வியடைந்த காரணத்தால் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றுள்ளார். பின் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்காணித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நடந்த விசாரணையில் நாகேந்திராவின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது. லதாவின் உடலை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனுடன் தனிமையில் இருந்த 18 வயது தங்கை; துள்ளத்துடிக்க கொன்ற சகோதரர்கள்.!