தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கேக் பிரியர்களா நீங்கள்?.. பிரபல பேக்கரியில் பூஞ்சையுடன் சாப்பிட வழங்கப்பட்ட கேக்..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சைனிக்புரி, 5 வது அவென்யூ பகுதியில் 30 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரபலமான தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கேக்கில் பூஞ்சை
இந்நிலையில், இன்று ப்ரீத்தி பிஸ்வாஸ் என்ற பெண்மணி கேக் சாப்பிட சென்ற நிலையில், பூஞ்சை வைத்திருந்த கேக் சாப்பிட பரிமாறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, கேக் தொடர்பான புகைப்படத்தை தனது எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச்சென்று பூட்ஸ் காலால் அடித்து நொறுக்கிய எஸ்ஐ; இளைஞர் குமுறல்.!
No food joint in #Hyderabad can be trusted anymore 😔 This is a popular bakery (5th Avenue Bakers) in #Sainikpuri that has been serving consumers for 30+ years. When I opened the Eclair, I found fungus in it. @cfs_telangana Let me know where I can file complaint for this. pic.twitter.com/oL8Po5NcwT
— Preeti Biswas (@Preeti_Biswas) May 25, 2024
ராமேஸ்வரம் கபேயை தொடர்ந்து அடுத்த சம்பவம்
மேலும், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு காலாவதியான பொருட்கள் இருப்பதாக நடவடிக்கை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு கையில் பாட்டில், மற்றொன்றில் சிகிரெட்; நடுரோட்டில் இளம் தம்பதி அட்டூழியம்.!