ஜூஸ் குடிக்கும் போதே... அதிர்ச்சி மரணம்... இளைஞர் பரிதாப சாவு.!



telungana men died by cardiac arrest who drunk juice

சமீப காலமாகவே திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்க கூடிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும், முன்பெல்லாம் வயதானவர்களை தான் இந்த நோய் பாதித்து வந்தது. ஆனால், தற்போது வயது வித்தியாசம் பாராமல் குழந்தைகள் இளைஞர்கள் என்று பலரையும் மரணிக்க செய்கிறது. 

மருத்துவ உலகினரோ தற்போது காய்ச்சல், தலைவலி போன்று மாரடைப்பு சாதாரணமாக ஏற்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கின்றனர்.

heart attack

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: "என் போனை கொடு.. இல்ல? வெளிய வச்சி உன்ன போட்டுருவேன்" ஹெட்மாஸ்டரை மிரட்டிய 11th மாணவன்.!

இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஒழுங்கற்ற உணவு முறை தான் என்றும், சமீப காலமாக ஜங்க் ஃபுட் கலாச்சாரம் அதிகரித்தது தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விராட் கோலி அவுட் ஆனதால் மாரடைப்பில் இறந்தாரா 14 வயது சிறுமி.?! தந்தை வெளியிட்ட தகவல்.!