ஸ்பா சென்டரில் 3 ஆண்களுடன் 18 இளம்பெண்கள்; கதவை திறந்த அதிகாரிகளுக்கு ஷாக் காட்சி..!



telangana-prostitution-18-girls-rescued

File Photo

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடந்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Telangana

அங்கு மூன்று ஆண்கள் மற்றும் 18 இளம்பெண்கள் இருந்ததால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் இளம்பெண்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராயல சுருதி, ரமணா மற்றும் ஜாகத் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளிலிருந்து இளம் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலமானது. 

இதனையடுத்து பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள் அங்கு வாடிக்கையாளராக இருந்த மூன்று ஆண்கள் மற்றும் விபச்சார தொழில் செய்த மூன்று பேர் என ஆறு பேரை கைது செய்தனர்.