9 ஆண்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெற்றோர்; காதலியை கோடரியால் நடுரோட்டில் வெட்டிக்கொன்ற காதலன்.!Telangana Nirmal Girl Killed by Lover 

 

பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக காதலன் காதலியை வெட்டி படுகொலை செய்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டம், கானாபூர், அம்பேத்கர் காலனியை சேர்ந்த இளம்பெண் அலோக்யா (வயது 20). அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த் (வயது 27).

நேற்று மதியம் அலோக்யா தையல் வகுப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், அவரை இடைமறித்த ஸ்ரீகாந்த், அலோக்யாவை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அலோக்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், இருவரும் காதல் வயப்பட்டது தெரியவந்தது. 

Telangana News

9 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், அலோக்யாவின் பெற்றோர் தங்களின் மகளை வேறொரு நபருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் விருப்பம் இல்லாத ஸ்ரீகாந்த், தனது காதலியின் வீட்டில் சென்று சண்டையிட்டுள்ளார். 

அவர்கள் எதற்கும் ஒத்துவராத காரணத்தால், தனது காதலியை அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.