தேசிய கோடி ஏற்ற முயற்சி: மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி.!Telangana Mulugu 3 Died Electrocution 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முளுகு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விஜய், அஜித், அக்ரி. இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். 

இன்று குடியரசு தினத்தை சிறப்பிக்க தங்களின் பகுதியில் கொடிக்கம்பம் நட்டு இருக்கின்றனர். அப்போது, மின்கம்பம் மீது கொடிக்கம்பம் உரசி இருக்கிறது. 

இதில் மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டன. நிகழ்விடத்திலேயே 25 வயதுடைய விஜய் மற்றும் 35 வயதுடைய அஜித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

25 வயதுடைய சக்ரி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.