வங்கியின் பூட்டை உடைத்து பணம் திருட முயன்ற 13 வயது சிறுவன்; காட்டிக்கொடுத்த சி.சி.டி.வி காட்சிகள்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூபாத் மாவட்டம், பாரத் ஸ்டேட் வங்கிக்குள் துப்புரவு பணியாளர் தனது பணியை மேற்கொள்ள நேற்று வந்திருக்கிறார்.
அப்போது வங்கி கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, 13 வயது சிறுவன் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த சிறுவனை அதிகாரிகள் கைது செய்த அதிகாரிகள், சிறுவனின் திருட்டு முயற்சியை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.