சையத் சுல்தானாவை காதலித்து கரம்பிடித்த இளைஞர் நாகராஜ் ஆணவக்கொலை.. பெண் வீட்டார் விவகார செயல்.!

சையத் சுல்தானாவை காதலித்து கரம்பிடித்த இளைஞர் நாகராஜ் ஆணவக்கொலை.. பெண் வீட்டார் விவகார செயல்.!


Telangana Hindu Muslim love marriage hindu man killed by girl relation

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 25). இவர் ஹைதராபாத் கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த பெண்மணி சையது அஷ்ரின் சுல்தானா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக நாகராஜ் - சுல்தானா வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து, ஹைதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று பணியை முடித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு வந்தபோது, அவரை 4 பேர் கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி தப்பி சென்றது. 

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நாகராஜ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற மக்கள் முன்வரவில்லை. தகவல் அறிந்துவந்த கவலை துறையினர் நடத்திய விசாரணையி, சுல்தானாவின் உறவினர்கள் கொலையில் ஈடுபட்டது அம்பலமாவே, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.