அடி ஆத்தி...! சார்ஜ் போட்ட 10 நிமிடங்களில் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! நாலாபுரமும் பரவிய தீப்பிளம்புகள்... பகீர் காட்சி!!!



telangana-electric-scooter-explosion

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம் கோருட்லாவில் சார்ஜ் போட்ட 10 நிமிடங்களிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சைராம்பூர் காலனியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உரிமையாளர் உடனடியாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சார்ஜ் போட்ட 10 நிமிடங்களில் வெடித்த ஸ்கூட்டர்

சைராம்பூர் காலனியைச் சேர்ந்த ஒருவர், சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டின் முற்றத்தில் நிறுத்தி சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜிங் தொடங்கி சரியாக 10 நிமிடங்களே ஆன நிலையில், ஸ்கூட்டரில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் வாகனம் வெடித்துச் சிதறியது.

இதையும் படிங்க: நா மட்டும் எதுக்கு இங்க இருந்துட்டு... திருமணத்துக்கு ரெடியான காதல் ஜோடி! காதலனுக்கு நடந்த அந்த அதிர்ச்சியால்.. காதலி எடுத்த விபரீத முடிவு..! பதறவைக்கும் சம்பவம்..!! !

நாலாபுறமும் பரவிய தீப்பிளம்புகள்

வெடிப்பைத் தொடர்ந்து தீப்பிளம்புகள் நாலாபுறமும் பரவின. இதனால் ஸ்கூட்டர் முழுவதும் கணநேரத்தில் தீப்பற்றி கருகியது. வீட்டின் அருகே வாகனம் இருந்ததால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், உரிமையாளர் சமயோசிதமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தார். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஸ்கூட்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. பேட்டரி கோளாறு அல்லது சார்ஜிங் தொடர்பான பிரச்சினை காரணமாக இருக்குமா என்பது உள்ளிட்ட விவரங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

சார்ஜ் போடும் நிலையில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்திருப்பது அப்பகுதியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணை முடிவில் வெடிப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: எப்படியெல்லாம் சொல்லி புள்ளையை ஏமாத்திருக்கான்...! சிப்ஸ், ஆப்பிள் தர்றேன் என்கிட்ட வா... 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய லாரி டிரைவர்! அந்த நேரத்தில் கடவுளாய் வந்த கடைக்காரார்.... பகீர் பின்னணி..!!!