வீதியில் இறங்கி போராடிய மாணவ - மாணவிகள்.. மாற்றத்தை நோக்கி இளம் தலைமுறை.!

வீதியில் இறங்கி போராடிய மாணவ - மாணவிகள்.. மாற்றத்தை நோக்கி இளம் தலைமுறை.!



telangana-alampur-students-protest-against-close-wine-s

கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் மதுபானக்கடையை அகற்றக்கூறி, நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

Telangana

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜோகுழம்பா கட்வால் மாவட்டத்தில் இருக்கும் அலம்பூரில் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள, நகரின் முக்கிய பகுதியில் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபானக்கடையில் மதுபானம் அருந்தும் நபர்களின் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லும் குழந்தைகள், மாணவ - மாணவியருக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

Telangana

இதனையடுத்து, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றார். இதனால் நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ வி.எம் ஆபிரகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 

Telangana

சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள 2 மதுபானக்கடைகளை அகற்றக்கூறி போராட்டம் நடந்து, பேரணி சென்றதால் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தை தொடர்ந்து, நாளைக்குள் (2 டிசம்பர் 2021) மதுபானக்கடையை அகற்றுவதாக அவர் உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.