ஸ்ப்ரே அடிச்சு ஆசிரியர் தின கொண்டாட்டம்... மாணவனுக்கு தர்ம அடி... வைரல் வீடியோ.!



teachers-day-celebration-went-wrong-a-student-thrashed

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த கல்வியாளரும் மற்றும் ஆசிரியருமான  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக  கொண்டாடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளில்  ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் தங்களது குருக்களான ஆசிரியர்களுக்கு  இனிப்புகள் வழங்கியும்  கேக் கொடுத்தும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

Sep 5இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அன்று ஆசிரியர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு வட மாநிலம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த காணொளியை பலரும் பகிர்ந்து  ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஒரு பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆசிரியரோடு சேர்ந்து உற்சாகமாக ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கொண்டாட்டங்களின் போது மாணவர் ஒருவர்  அடித்த ஸ்ப்ரே ஆசிரியரின் முகத்தில் பட்டு விட்டது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியர் மாணவனை பிடித்து அடிக்கிறார். இந்தக் காணொளி தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.