படிக்க முடியாமல் திணறிய மாணவனுக்கு ஆசிரியர் செய்த கொடூரம் - TamilSpark
TamilSpark Logo
உலகம் சமூகம்

படிக்க முடியாமல் திணறிய மாணவனுக்கு ஆசிரியர் செய்த கொடூரம்

பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் பதேபூர் என்ற பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஹமீத் ராஜா என்பவர் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

சில நாட்களுக்கு முன் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது, கஸ்தான் 7, சிறுவனை அழைத்து தான் நடத்திய பாடத்தை படிக்கும்படி கூறியுள்ளார். படிக்க முடியாமல் சிறுவன் திணறியபடி நின்றிருக்கிறான். 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், பள்ளியில் இருந்த புற்களை பிடுங்கி வந்து, சிறுவனை தின்ன வைத்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் வெளியில் தெரிய வர பெரும் சர்ச்சையானது. ஆசிரியர் தங்களது உறவினர் என்று சொல்லி சிறுவனின் பெற்றோர் இதை பெரிதுபடுத்தவில்லை. இருப்பினும் தகவல் பரவியதையடுத்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹமீத் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo