TCS பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.! 



tata-consultancy-service-announce-increment-for-employe

டாடா நிறுவனம் தனது கிளையான டாடா கன்சல்டன்சி நிறுவன பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ் சார்பில் பணியாற்றி வரும் 70% ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், எஞ்சியுள்ள 30% ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் பொறுத்து ஊதிய உயர்வானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸில் 6 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலயில், அவர்களில் 4 இலட்சம் பேருக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

TCS company

டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் புத்தாண்டை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மகிழ்ச்சியாக எதிர்கொள்கின்றனர். மேலும், ஊதிய உயர்வு வழங்கியதற்கு தங்களின் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.