தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!



tamilnadu-weather-forecast-july-2025

மேற்கு திசை காற்று காரணமாக, ஜூலை 17 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் கனமழை

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஜூலை 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையின் அதிகரிப்பு

ஜூலை 13 வரை தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் இருக்காது. ஆனால், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ்வரை அதிகரிக்கும். மேலும் அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் சில இடங்களில் அசௌகாரியங்கள் ஏற்படக்கூடும்.

இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை!! தென்றலுடன் உருவான வானிலையால் லேசாக குளிர்ந்த சென்னை!

சென்னையில் மேகமூட்டம் மற்றும் லேசான மழை

சென்னையில் வானம் மேகமூட்டம் கொண்டதாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39°C மற்றும் குறைந்தபட்சம் 28-29°C வரை இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

 

இதையும் படிங்க: சந்தோசமாக குற்றாலத்திற்கு சென்ற தம்பதி! அருவியில் குளித்த பின், நொடிப்பொழுதில் கணவனின் மடியில் மயங்கிய மனைவி! அடுத்த நடந்த அதிர்ச்சி...