இந்தியா Covid-19

மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த கொரோனா நோயாளி..! இளைஞரின் சோக முடிவு.

Summary:

Suspected COVID-19 patient attempts to commit suicide at Delhi AIIMS

கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டுவரும் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கொரோனா அறிகுறியுடன் டெல்லி ஐபி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 37 வயது இளைஞர் ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் முடிவில் அந்த இளைஞர் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே விழுந்த அவரை அங்கிருத்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிர்க்கு ஆபத்து இல்லை என்றாலும், அந்த இளைஞரின் கால் முறிந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

கொரோனா நோயாளிகள் பலரும் குணமாகிவரும் நிலையில் இதுபோன்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து, நம்பிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறிவருகின்றனர்.


Advertisement