மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் ஹிந்தி நடிகைக்கு காதல் கடிதம்; கவிதை அருவியாய் வெளியான பகீர் தகவல்.!
மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் ஹிந்தி நடிகைக்கு காதல் கடிதம்; கவிதை அருவியாய் வெளியான பகீர் தகவல்.!

சிறையில் தனிமையில் வாடினாலும் என் இதயம் உன்னையே தேடுகிறது என சுகேஷ் காதலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பண மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர், டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது பிறந்த நாளையொட்டி இந்தி நடிகை மற்றும் தனது காதலியான ஜாக்லின் பெர்னாண்டஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, "என்னுடைய அழகு பொம்மையே.. நான் எனது பிறந்த நாளில் உன்னை மிஸ் செய்கிறேன். என்னை சுற்றிலும் உனது சக்தி இல்லாமல் நான் தவித்து வருகிறேன்.
அதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகளும் இல்லை. உன் மீதான அன்பு எப்போதும் முடிவடையாதது. உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதற்கு சான்று தேவையில்லை.
ஆனால் உன் அன்பு போதும்.. என்னுடைய கொழு கொழு பொம்மையே., நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீயும் அறிவாய்.. உன் அன்பு எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு.. அவை விலைமதிப்பற்றவை. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன். உன்னை நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.