பொதுத்தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதிக்காத ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு!

பொதுத்தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதிக்காத ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு!



Student for not allowed exam in telungana

தெலுங்கானா மாநிலத்தில் பொதுத்தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை அனுமதிக்காததால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில்  11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் அடிலாபாத் மாவட்டம் மங்குருலா கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவர் தேர்வு எழுத அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது மாணவன் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

telungana

இதனால், அவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மாணவன் நீண்ட நேரம் கோரிய பிறகும், விதிப்படி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என ஆசிரியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து சென்ற மாணவன் திடீரென காணாமல் போயுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் மாணவனின் கைக்கடிகாரம் மற்றும் அவரது உடமைகளுடன் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவன் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தேடிய நிலையில் ஏரியில் இருந்து மாணவனை சடலமாக மீட்டனர்.

telungana

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.