காரில் அடிபட்ட தெரு நாய்க்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்.! விமானத்தில் பறக்கவிருக்கும் அதிர்ஷ்டக்கார நாய்க்குட்டி.!

காரில் அடிபட்ட தெரு நாய்க்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்.! விமானத்தில் பறக்கவிருக்கும் அதிர்ஷ்டக்கார நாய்க்குட்டி.!



street dog will to canada

கர்நாடக மாநிலம் பல்லாரி நகரில் உள்ள ரேடியோ பார்க்கிற்கு அருகில் இரண்டு மாத  நாய்க்குட்டி ஒன்று சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த "ஹியூமன் வேர்ல்டு பார் அனிமல்ஸ்" என்ற அமைப்பு, அந்த நாயை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் அந்த நாயை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நாயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. தற்போது அந்த நாய்க்குட்டிக்கு இரண்டு வயதாகிறது.

இந்நிலையில் அந்த நாய் குறித்த தகவலை இணையதளங்களில் அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அப்போது கனடாவில் வசிக்கும் ஒரு பெண் இதனை அறிந்து அந்த நாயை வளர்க்க முடிவு எடுத்துள்ளார். கனடாவை சேர்ந்த பெண் ஒருவர், நாயை தத்தெடுக்க முன் வந்துள்ளார். அந்த நாய்க்கு, 'அனந்த்யா' என பெயரிடப்பட்டுள்ளது. இதை கனடாவுக்கு கொண்டு செல்ல பாஸ்போர்ட் தயாராகி வருகிறதாக கூறப்படுகிறது.