அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
புலியை, பூனை என நினைத்து துரத்திய தெரு நாய்கள்; அடுத்து நடந்த சம்பவத்தை பாருங்க!! வைரல் வீடியோ.
புதுடெல்லி பகுதியில் குடிநீர் மற்றும் உணவுத் தேவைகளுக்காக காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. யானை, கரடி, மான் போன்ற விலங்குகள் தங்கள் இயற்கை வாழ்விடங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளாக மாறியதால், தவறுதலாக நகரப் பகுதிகளுக்குள் வருகின்றன.
சிறுத்தைப்புலியை நாய்கள் துரத்திய காட்சி
சில நேரங்களில் சிங்கம், சிறுத்தைப்புலிகள் போன்றவை ஊருக்குள் நுழைகின்றன. உணவுக்காக சிறுத்தைப்புலிகள் இரவில் வேட்டையாடும்போது வீட்டின் வாசலில் இருக்கும் வளர்ப்பு நாய்களை கூட பிடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தெருநாய்கள் குழு ஒன்று சிறுத்தைப்புலியை பெரிய பூனை என நினைத்து துரத்தி சென்றது.
சிரிப்பை ஏற்படுத்திய வீடியோ
அந்த சிறுத்தைப்புலி சாலையிலிருந்து ஓடி ஒரு சந்துக்குள் புகுந்தது. நாய்கள் துரத்தியபோது அது சிறுத்தைப்புலி என உணர்ந்தவுடன், நாலாபுறமும் பீதி அடைந்து சிதறி ஓடியது. இந்த சம்பவம் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி, “அது ஒரு பூனைதானே என நினைத்தன” என்ற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரவலாக சிரிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கேட்டில் கை வைத்த நபர்! ஒரு சில விநாடிகளில் பேரழிவாக மாறிய அதிர்ச்சி! வெளியான சிசிடிவி காட்சி...
நெட்டிசன்களின் கருத்துகள்
பலர் சிரிப்பு எமோஜிகளுடன் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். ஒருவரின் கருத்துப்படி, தெருநாய்கள் அந்த பகுதியின் தலைவர்கள் போல நினைத்து நடந்துகொண்டன, ஆனால் பின் ஓடுவதற்கான வழியையும் காணவில்லை. இன்னொருவர், ஒரு நாய் திரும்பி வரவில்லை போல, அது சிறுத்தைப்புலியிடம் சிக்கியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
They thought it's just a CAT pic.twitter.com/EO6P9Z4ODi
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 15, 2025
இதையும் படிங்க: பூனை என நினைத்து கூட்டம் கூட்டமாக விரட்டிய தெரு நாய்கள்! அங்க தான் டிவிஸ்டே இருக்கு பாருங்க! வைரலாகும் வீடியோ!