பூனை என நினைத்து கூட்டம் கூட்டமாக விரட்டிய தெரு நாய்கள்! அங்க தான் டிவிஸ்டே இருக்கு பாருங்க! வைரலாகும் வீடியோ!



leopard-mistaken-as-cat-by-street-dogs

நகரப் பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் நுழையும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அண்மையில் யானை, மான், கரடி போன்ற விலங்குகள் ஊருக்குள் வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது ஒரு சிறுத்தைப் புலி நகரத்தில் தெருவழியாக நடந்துசென்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தெரு நாய்கள் சில, வழக்கம்போல் தங்கள் பகுதியை பாதுகாப்பதற்காக, சாலையில் நடந்து சென்ற சிறுத்தையை பூனை என எண்ணி துரத்துகின்றன. ஆரம்பத்தில் பெரிய பூனை என நினைத்து பின் தொடரும் நாய்கள், சிறிது நேரத்தில் அதன் அசுர வேகத்தையும், தோற்றத்தையும் பார்த்து அது சிறுத்தை என்பதைக் கணித்தவுடன், நாலாபுறமாக ஓடி தப்பிச் செல்கின்றன.

இந்த காட்சி “அது ஒரு பூனைதானே என நினைத்தன…” என்ற தலைப்பில் X தளத்தில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஏராளமான மீம்ஸ் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே பாய்ச்சலில் பறவையை கொடூரமாக வேட்டையாடிய சிறுத்தை! அதிர்ச்சி தரும் வைரல் காணொளி!

ஒருவரின் கருத்துப்படி," அந்த நாய்கள் தங்களே தலைவர்கள் என நினைச்சு ஃபுலா கம்பீரமா நடந்துகொண்டாங்க... ஆனா உண்மை தெரியும்போது ஓட ஓட கலங்கியாச்சு!" என காமெடிக்காக பகிரப்பட்டுள்ளது. மற்றொருவர்,அந்த கும்பல்ல ஒரு நாய் மட்டும் திரும்பி வரல போல இருக்கு… அதான் சிறுத்தைக்கு சிக்கியிருக்கலாம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவியதால், மக்களிடையே சிரிப்பும் சிந்தனையும் ஏற்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கணவரை கத்தியால் குத்த துணிந்த மனைவி! என்ன காரணம் தெரியுமா? சிறு குழந்தை கதறி அழுதப்படி தடுக்க முயற்சி! பதறவைக்கும் வீடியோ காட்சி..