அய்யோ... மழையில் இருந்து தப்பிக்க கடை கூரையில் ஏறிய மாடு! சட்டுனு சறுக்கி விழுந்ததால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வித்தியாசமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. மழையில் இருந்து தப்பிக்க முயன்ற ஆவார மாடு ஒன்று திடீரென கடை கட்டிடத்தின் கூரையில் ஏறியது. அதை பார்த்த வியாபாரிகளும் பொதுமக்களும் அங்கு திரண்டதால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மழையில் இருந்து தப்பிக்க கூரையில் ஏறிய மாடு
தகவலின்படி, தெருக்களில் சுற்றித்திரிந்த காளை மாடு மழையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த கடையின் கூரைக்கு ஏறியுள்ளது. எதிர்பாராத இந்த காட்சியால் அருகிலிருந்த கடைக்காரர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விலங்கு நல ஆர்வலர் சன்னி சோப்ரா மற்றும் அவரது குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திக் திக் காட்சி! நீதிமன்ற வலாகத்தில் ஐந்தாவது மாடியில் ஏறி குழந்தையுடன் குதிக்க முயன்ற தாய்...!!!
மீட்பின்போது நடந்த எதிர்பாராத திருப்பம்
உள்ளூர் மக்களின் உதவியுடன் மாட்டை பாதுகாப்பாக கீழே இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாடு திடீரென நிலைதடுமாறி கூரையில் இருந்து கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் சில நொடிகள் பதற்றமடைந்தனர்.
காயமின்றி தப்பிய மாடு; மக்கள் கோரிக்கை
அதிர்ஷ்டவசமாக மாட்டுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் பாதிப்பின்றி தப்பினர். பின்னர் மாடு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நகரின் கடை வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஆவார மாடுகளால் விபத்து அபாயம் அதிகரித்து வருவதாகக் கூறிய அப்பகுதி மக்கள், அவற்றுக்காக நிரந்தரக் காப்பகங்கள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
UP के मुज़फ्फरनगर में बारिश से बचने को एक सांड छत पर चढ़ गया। लोगो ने उतारने की कोशिश की। इस बीच छत से उतारने के प्रयास में टीन शेड टूटा तो सांड नीचे आ गिरा। pic.twitter.com/bPdoBcbqmS
— TRUE STORY (@TrueStoryUP) July 10, 2026
இதையும் படிங்க: நிமிஷத்துல இப்படியா நடக்கணும்! கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பறந்து போன பைக்குகள்! திக் திக் விபத்து வீடியோ!!!