சொத்துக்காக இப்படியா? மகனை கண்டந்துண்டமாக கூறுபோட்டு ஆற்றில் வீசிய தகப்பன்.. தேனியில் படுபயங்கரம்.!



Father Arrested for Allegedly Killing Son Over Property Dispute in Theni After 3-Year Investigation

இளைஞர் கொலை வழக்கில், இளைஞரின் தந்தை 3 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ள பகீர் தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

3 மனைவிக்காரர்:

தேனியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் பாலா (வயது 49). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆவார். இவருக்கு 3 மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி ராஜலட்சுமிக்கு ஸ்ரீகாந்த் என்ற 19 வயதுடைய மகன் இருக்கிறார், 2 மகள்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக முதல், இரண்டாம் மனைவியை பிரிந்த பாலா, மூன்றாவது மனைவியுடன் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்.. அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? சேலத்தில் கொடூரம்..!

Crime news

இளைஞர் மாயம்:

இதனிடையே, முதல் மனைவியுடைய மகன் ஸ்ரீகாந்த் தந்தையிடம் தங்களுக்கு வரவேண்டிய சொத்தை பிரிதுகேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக தந்தை-மகன் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2023ல் ஸ்ரீகாந்த் மாயமனனர். பின் மகன் மாயமானது குறித்து தேனி காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.

கண்காணிப்பு:

வழக்கில் பல ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாததால், மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணையில், தந்தை - மகன் இடையே இருந்த முன்விரோதத்தை அடிப்படையாக கொண்டு வேந்தர், அவரின் நண்பர்கள் அலெக்ஸ் (வயது 28), கருப்பையா (வயது 53) ஆகியோரை 2 மாதமாக கண்காணித்து வந்தனர்.

Crime news

கைது:

இவர்களில் அலெக்ஸை பிடித்து விசாரித்தபோது சொத்து பிரச்சனையில் மகனை கழுத்தை நெரித்துக்கொன்றதும், பின் கறிவெட்டும் கத்தியால் உடலை துண்டு துண்டாக வெட்டி முல்லையற்றில் வீசியதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின் வேந்தர், அலெக்ஸ் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் கருப்பையாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உயிர் கொடுத்த அக்காவுக்கு சொத்தை எழுதி வைத்த தம்பி.. கணவன், தாய்க்கு ஸ்கெட்ச் போட்ட பாசக்கார பெண்? தர்மபுரியில் இரட்டைக்கொலை திடுக்.!