இந்தியா

வெளியில் வந்த முதியவரை இப்படியா செய்வது! வைரலாகும் வீடியோவால் போலீசார் மீது எழும் எதிர்ப்புகள்!

Summary:

Srinagar police attack opd man at road

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சமயத்தில் வெளியில் வந்த முதியவர் ஒருவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் நடுரோட்டில் அடித்தும் காலால் உதைக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்படும் என்றும் சமூக விலகலை கடைப்பிடித்து தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் வீட்டை விட்டு வெளியில் வந்த முதியவர் ஒருவரை போலீசார் நடுரோட்டில் கீழே தள்ளி லத்தியால் அடிப்பது மட்டுமல்லாமல் காலால் உதைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடமையை உணர்ந்து மக்களுக்காக உழைக்கும் போலீசாரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட வீடியோக்களால் சட்டத்தை கையிலெடுக்கும் அவர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. மிகுந்த மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.


Advertisement