இந்தியா லைப் ஸ்டைல்

டிங்கி..!! கூப்பிட்டவுடன் குழந்தையைப் போல் ஓடிவந்து சாப்பிடும் அணில் குட்டி.. வைரல் வீடியோ..

Summary:

கூப்பிட உடன் குழந்தைபோல் ஓடிவந்து சாப்பிடும் அணில் குட்டியின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தி

கூப்பிட உடன் குழந்தைபோல் ஓடிவந்து சாப்பிடும் அணில் குட்டியின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறு சிறு உயிரினங்கள் தொடங்கி, மிகவும் ஆபத்தான சிங்கம், புலி, கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வரை அனைத்துமே மனிதர்களுடன் நெருக்கமாக பழகுவதை பார்த்திருப்போம். பொதுவாக நாய், பூனை, கிளி போன்றவற்றை மக்கள் தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்ப்பது வழக்கம்.

அதுவே வெளிநாடுகளில் சிலர் சிங்கம், புலி, பாம்பு போன்றவற்றை கூட தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் ஒருசிலர் அணிலை தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்துவருவதும் பொதுவான ஒன்று. அந்த வகையில் நபர் ஒருவர் தான் வளர்த்துவரும் அணிலை "டிங்கி" என பெயர் சொல்லி கூப்பிட அந்த அணில் குழந்தை போல் ஓடிவருகிறது.

மேலும் அந்த நபரின் கையில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து அந்த அணில் சாப்பிட தொடங்குகிறது. இந்த காட்சியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement