இந்தியா

இறந்த தந்தையின் புகைப்படத்தை செல்போனில் கண்ட மகன்! அடுத்த கணமே சாலையில் சுருண்டு விழுந்து நேர்ந்த விபரீதம்!

Summary:

Son sees photo of his father’s dead body on phone, dies of heart attack

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சநேய நாயுடு.78 வயது நிறைந்த இவர் வயது முதுமையின் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மகன் பாபு நாயுடு. இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை உயிரிழந்த செய்தி தெரியவந்த நிலையில், பாபு நாயுடு  அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

அப்பொழுது கார் பலமநேரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை அடைந்தபோது, ​ அங்கிருந்த போலீசார்கள் பாபு நாயுடுவை தடுத்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அவர் தந்தை இறந்த செய்தி குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் அவரிடம் ஆதாரம் கேட்டுள்ளனர். உடனே பாபு நாயுடு தனது உறவினரிடம் தந்தையின் சடலத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனுப்பிய புகைப்படத்தை கண்ட அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது


Advertisement