பெயிலானா அப்பா கொன்னுடுவாரு., நானே கொன்னுடுறேன் - மகன் பரபரப்பு செயல்..! துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

பெயிலானா அப்பா கொன்னுடுவாரு., நானே கொன்னுடுறேன் - மகன் பரபரப்பு செயல்..! துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!


son-killed-his-father-for-exam-fear

பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனால் தந்தை அடிப்பார் என எண்ணிய சிறுவன் தந்தையை வெட்டி கொன்ற பயங்கரம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா பகுதியில் வசித்து வருபவர் துலிச்சந்த் அகிர்வார்.இவரது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த  3ஆம் தேதி தனது வீட்டில் துலிச்சந்த் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனிடம் விசாரித்த போது, பக்கத்து வீட்டுக்காரர் வீரேந்திரா தனது வீட்டிலிருந்து தந்தை கொலை செய்யப்பட்ட அன்று வெளியேறுவதை பார்த்ததாகக் கூறியுள்ளார். தொடர்ந்து இரு வீட்டாருக்கும் முன்பே மனஸ்தாபம் இருந்து வந்த காரணத்தால் காவல் துறையினரும் வீரேந்திரா இந்த கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர்.

madhyapradesh

இருப்பினும் சிறுவனின் சில நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், சிறுவனை மீண்டும் துருவித்துருவி அவரை எப்போது பார்த்தாய்? எங்கே பார்த்தாய்? எந்த நேரத்தில் பார்த்தாய்? என விசாரித்த நிலையில் சிறுவன் உளறத்தொடங்கிவிட்டான். அத்துடன் இனி உண்மையை கூறாமல் இருந்தால் அடித்து விடுவார்களோ! என எண்ணி நான் தான் கொலை செய்தேன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டான்.

சிறுவன் சரியாக படிப்பதில்லை என துலிச்சந்த் அடிக்கடி அவரை திட்டி வந்துள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், ஒருவேளை தான் பெயில் ஆகி விட்டால் தனது தந்தை அடிப்பார் என எண்ணிய சிறுவன் அவரை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். சொந்த  மகனே, தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.