அம்மாடியோவ்.. இவ்வளவு பெருசா?? ஷூவுக்குள் இருந்ததை பார்த்தா மிரண்டு போயிருவீங்க! வைரலாகும் ஷாக் வீடியோ!!snake-in-shoe-video-viral

பாம்புகள் என்றால் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய மாவீரர்களாக இருந்தாலும் பாம்புகளை கண்டால் பதட்டம், நடுக்கம் கொள்ளாதவர்கள் கிடையாது. இந்நிலையில் அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் பாம்புகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் பெருமளவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அடுக்கி வைத்திருந்த ஷூவுக்குள் இருந்து பாம்பு ஒன்று படமெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பாம்புகள் ஆங்காங்கே சுருண்டு அதிகளவில் காணப்படும். மேலும் வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் ஷூவுக்குள்ளும் பதுங்கி கொள்ளும். 

இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்துள்ளது. மேலும் அதனை கவனிக்காமல் சிலர் பாம்பு தீண்டி உயிரிழந்த துயரங்களும் நேர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஷூவுக்குள் இருந்து நாகபாம்பு ஒன்று ஆக்ரோஷமாக படையெடுத்துள்ளது. மேலும் அதனை பிடிக்க முயன்றபோது கடிப்பதற்கு பாய்ந்துள்ளது. இந்த வீடியோவை மழைக்காலங்களில் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை விடுத்து IFS அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.