இந்தியா

துணி துவைக்க வாஷிங் மெஷின் கதவை திறந்த நபர்..! உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி.. பரபரப்பு சம்பவம்..

Summary:

துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் ஸ்ரீநிவாஸ், கடந்த 14 ஆம் தேதி அன்று தனது துணிகளை துவைப்பதற்காக வீட்டில் இருந்த வாஷிங் மெசினை திறந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அந்த பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஸ்ரீநிவாஸ் வாஷிங் மெஷினின் கதவை திறந்ததும், அதனுள் இருந்து பெரிய நாக பாம்பு ஒன்று படம் எடுத்தபடி வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநிவாஸ், உடனே கத்தி கூச்சலிட அவரது குடும்பத்தினர் அங்கு ஓடிவந்தனர். பயத்தில் அவர்களும் கத்தி கூச்சலிடவே பாம்பு வாஷிங் மெஷின் உள்ளே சென்று மறைந்துகொண்டது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், வாஷிங் மெஷின் உள்ளே மறைந்திருந்த பாம்பை பிடித்தார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement