இந்தியா

மீனவரின் வலையில் சிக்கிய 780 கிலோ எடைகொண்ட அரியவகை மீன்..! அடேங்கப்பா..! விலை எவ்வளவு தெரியுமா.?

Summary:

Single fish sold for 20 lakhs

மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய மீன் ஒன்று சுமார் 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் டிகா பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்கும் படகுடன் கடலுக்குள் சென்றுள்ளனர். கடலுக்குள் சென்ற அவர்கள் கடலில் வலையை வீசியபோது மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. உடனே படகை கரைக்கு திருப்பிய அவர்கள் கரையில் இருந்தவர்களின் உதவியுடன் மீனை வலையில் இருந்து எடுத்துள்ளனர்.

பின்னர் பெரிய கயிறுகளால் கட்டி அந்த மீனை வாகனம் ஒன்றில் ஏற்றி மீனவர்கள் சங்கத்திற்கு எடுத்துச் சென்று மீனை எடைபோட்டதில் அந்த மீன் சுமார் 780 கிலோ எடை இருந்துள்ளது. மேலும் அந்த மீன் சில்சங்கர் எனப்படும் அறியவகையை சேர்ந்ததால் ஒருகிலோ 2100 என முடிவுசெய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இறுதியில் அந்த மீன் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான தொகையில் விற்கப்பட்டுள்ளது. ஜாக்பாட் அடித்ததுபோல் ஒரே மீனில் இவ்வளவு வருமானம் கிடைத்ததை அடுத்து அந்த மீனை பிடித்த மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement