பயங்கர நிலச்சரிவு...! திடீரென படபடவென விழுந்த மலைகள்... மண்ணோடு மண்ணாக தரைமட்டமான வீடுகள்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ!!!
மேற்கு சிக்கிமின் யுக்சோம்-டாஷிடிங் தொகுதிக்கு உட்பட்ட ரிம்பி கிராமத்தில் தொடர் கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு திடீரென பாறைகளும் மண்ணும் சரிந்து குடியிருப்புகளைத் தாக்கின. இதில் மின்சாரத் துறை அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
குடியிருப்புகளை நோக்கி சரிந்த மண், பாறைகள்
மேற்கு சிக்கிம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ரிம்பி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையோரத்தில் இருந்து மண் மற்றும் பாறைகள் திடீரென கீழ்நோக்கி சரிந்ததால் கட்டிடங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து மழை நீடிப்பதால் வீடுகள், உடைமைகள் மட்டுமின்றி சாலைப் போக்குவரத்துக்கும் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
காங்டாக்கிலும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்டாக் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் ஷெரிங் டி பூட்டியா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் லுயிங்-ரங்கா நெடுஞ்சாலை, போஜோகாரி, சிச்சே, அரிக்டாங் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது பொது உள்கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின் மாற்றிகள் அருகே அதிக அளவில் மண் கழிவுகள் குவிந்திருப்பது தெரியவந்தது.
ஆபத்தான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க ஆபத்தான சரிவுப் பகுதிகளில் தார்பாய்கள் விரித்து மழைநீர் ஊடுருவுவது தடுக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் குவிந்துள்ள மண் கழிவுகளை அகற்றி போக்குவரத்தை விரைவாக மீட்டெடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகிலுள்ள மலையோரங்களில் விரிசல் அல்லது மண் நகர்வு தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
#WATCH | Sikkim | A major landslide triggered by continuous rainfall caused extensive damage in Rimbi Village under the Yuksom-Tashiding Constituency of West Sikkim last night. No loss of life has been reported so far.
— ANI (@ANI) September 25, 2026
(Visual Source: District administration) pic.twitter.com/gdBojiVnIt
#WATCH | Sikkim | A major landslide in the Rimbi area has left more than 30 houses affected. The incident was triggered by heavy mudslides and debris coming down from the upper slopes, sending large quantities of mud, rocks and other debris towards the lower areas
— ANI (@ANI) September 25, 2026
(Video source:… pic.twitter.com/5rhBlSoiTB