ஷாக்.. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. பரபரப்பு சம்பவம்..!

ஷாக்.. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. பரபரப்பு சம்பவம்..!


Shock.. acid attack on young girl.. sensational incident..!

உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அண்மையில் வரன் பார்த்து குடும்பத்தார் திருமணம் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவத்தன்று அந்தப் இளம்பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது முகத்தை மூடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்தப் பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

Acid attack

இதனையடுத்து அந்தப் பெண் மர்ம நபர்களை தவிர்த்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அந்தப் பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து அலறி துடித்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் நல்வாய்ப்பாக உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.