6 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கை, கால்களைக் கட்டி வாயில் துணி வைத்து அமுக்கி... வீட்டின் அடித்தளதண்ணீருக்குள் கிடந்த சடலம்! ட்ரோன் மூலம் பாதுகாப்பு காவலரை தேடும் போலீஸ்... பகீர் சம்பவம்..!!!



secunderabad-missing-girl-found-dead-ux3am2

தெலுங்கானா மாநிலம் சிக்கந்தராபாத்தில் காணாமல் போன 6 வயது சிறுமி அருலியா மோசஸ், அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் கிளப் ஹவுஸ் அடித்தளத்தில் உள்ள தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் மற்றும் கொலை வழக்காகப் பதிவு செய்துள்ள போலீசார், முக்கிய சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.

₹20 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார்

இந்த வழக்கில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றிய விக்ரம் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் சிறுமியின் தந்தையிடம் ₹20 லட்சம் பிணைத்தொகை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 1 இல்ல.. 2 இல்லங்க.. மொத்தம் 21..! நான் தான் வேணும்ன்னு.. என்னை தேடி வந்த பெண்கள்! 21மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்... தினமும் ஒரு மனைவியுடன் டியூட்டி! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!!

போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் சிறுமியின் கை, கால்களைக் கட்டி, வாயில் துணியைத் திணித்து கொலை செய்துவிட்டு தண்ணீரில் வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சிறுமியின் மரணத்துக்கான காரணம் மற்றும் குற்றம் நடந்த விதம் குறித்து உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

ட்ரோன் மூலம் தேடப்படும் முக்கிய சந்தேக நபர்

சம்பவத்துக்குப் பிறகு விக்ரம் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்க மல்காஜ்கிரி மண்டல போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். ட்ரோன்கள் மற்றும் தனிப்படைகளைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகு, மரணத்துக்கான காரணம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள விக்ரமைப் பிடிக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: கண்ணுமுண்ணு தெரியாம வரீங்களே இப்படி...! ஐயோ.. விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மீது கார் ஏறி தூக்கி வீசப்பட்ட கொடூரம்! அதிர்ச்சி வீடியோ..!!!