இந்தியா

அறுவை சிகிச்சைக்கு பிறகு, அலட்சியத்தால் மருத்துவர்கள் செய்த காரியம்! உண்மை தெரிந்து ஆடிப்போன நோயாளியின் குடும்பத்தினர்!

Summary:

Scissor kept in patient stomach after surgery in kerala

கேரளா திருச்சூரில் உள்ள கனிமங்கலம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் பால். 55 வயது நிறைந்த இவருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தார்கள்  அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில், பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அங்கு மருத்துவர் கவனக்குறைவால் ஜோசப்பின்  வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்துள்ளார். பின்னர் அதனை அகற்றுவதற்காக மீண்டும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோசப் பாலின்  மனைவி கூறுகையில், எனது கணவர் ஹெடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் எங்களால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செலவு செய்ய முடியாததால் நாங்கள் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம். முதலில் நாங்கள் மருத்துவக் கல்லூரியில் உள்ள இரைப்பை மற்றும் குடலியல் நிபுணரான டாக்டர் பிரவீனைதான் சந்தித்தோம். அப்பொழுது அவர் டாக்டர் பாலியை பரிந்துரை செய்தார். 

பின்னர் நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மருத்துவ கல்லூரிக்கு வராமல், தனது சொந்த மருத்துவமனைக்கு ஆலோசனைக்கு வருமாறு கூறினார். மேலும் அறுவை சிகிச்சையை நன்றாக செய்து கொடுக்க பத்தாயிரம் ரூபாய் பணமும் எங்களிடம் வாங்கிக்கொண்டார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த 10 நாளிலேயே மீண்டும் பித்தநாளத்தில் மலம் இருப்பதாக கூறி மற்றொரு அறுவைசிகிச்சை செய்தனர். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எனது கணவரை  சிடி ஸ்கேன் செய்த சீனியர் மருத்துவர் குடலில் தொற்று இருப்பதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறினார். ஆனால் அவர்களது நடவடிக்கை எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எனது கணவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தோம். அப்போது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையிலேயே அவருக்கு  அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோலை வெளியே எடுத்தோம். மேலும் இதுகுறித்து டாக்டர் பாலியிடம் கேட்ட நிலையில் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் எதற்காக எங்களிடம் பணம் வாங்கினார் எனவும் தெரியவில்லை என கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து டாக்டர் பாலியை விசாரிக்க வேண்டும் என ஜோசப்பின் குடும்பத்தினர்  மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ கல்லூரி கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement