மாணவர்களுக்கு இனி ஜாலிதான்! கல்வி உதவித்தொகையை அதிகரித்து பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு.!

மாணவர்களுக்கு இனி ஜாலிதான்! கல்வி உதவித்தொகையை அதிகரித்து பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு.!


school students increase scholership - pm modi

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பாஜக. இதனால் நேற்று முன் தினம் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதல் நிதியை பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2250 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கி கையெழுத்திடப்பட்டுள்ளது.