கொரோனாவால் பறிபோன வேலை! காய்கறிகள் விற்கும் கால்பந்து பயிற்சியாளர்!

கொரோனாவால் பறிபோன வேலை! காய்கறிகள் விற்கும் கால்பந்து பயிற்சியாளர்!



school foot ball coach sales vegetables

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து நிற்கிறது. உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனாவால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து விட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், தினமும் வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பாதிப்புகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகம் முழுவதுமே இதுதான் நிலை.

பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வருவாய் இழப்பு என்ற காரணத்தின் காரணமாக பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து இயன்ற வரை வருமானத்தை ஈட்டி வருகின்றனர். 

அந்த வகையில், மும்பையில் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்த பிரதாச் போசலே என்பவர் இப்போது காய்கறி விற்று வருகிறார். இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில் "நான் ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கம் காரணமாக நான் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டேன். இப்போது என்னுடைய வருமானத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்" என கூறியுள்ளார்.