இந்தியா வீடியோ

தொட்டால் பரவும் கொரோனாவிலிருந்து தப்பிக்க சச்சின் எடுத்த பாடம்! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

Sachin post video about awarness for coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரஸால் உலகம் முழுவதும் 160000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 மேலும் இந்தியாவிலும் இதுவரை கொரோனா வைரசால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனோவை  கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்களை மூடவும் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் மற்றும் தேவையில்லாத பயணங்கள் ஆகியவற்றை தடை செய்யவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பல பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் எவ்வாறு சுத்தமாக கை கழுவவேண்டும் என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 


Advertisement