20 கிமீ தூரம் ஆம்புலன்ஸை ஓட்டிய நடிகை ரோஜா! கிளம்பிய பெரும் சர்ச்சை! எதனால் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

20 கிமீ தூரம் ஆம்புலன்ஸை ஓட்டிய நடிகை ரோஜா! கிளம்பிய பெரும் சர்ச்சை! எதனால் தெரியுமா?

தமிழ் சினிமாவில் செம்பருத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, பிரபு, சத்யராஜ்,  சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதனைத்தொடர்ந்து ஆந்திர அரசியலில் குதித்த அவர் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில்  ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் துவக்கிவைத்தார். அதனை தொடர்ந்து நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார்.

அப்போது டிரைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் அமர்ந்த  அவர் திடீரென ஆம்புலன்சை ஓட்ட தொடங்கி, நகரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில்  ரோஜாவின் இந்த செயலை தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ்தான் கிடைத்ததா?  அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo