இந்தியா

ஜில்லுனு வீசிய ஏசி காற்று..! திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய திருடன்.! அதன்பின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.!

Summary:

Robbery fails thief slept in home in Andhra

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் திருடச் சென்ற வீட்டில் அயர்ந்து தூங்கிய நிலையில் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகாவரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சூரி பாபு(21). இவர் வெங்கட் ரெட்டி என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு திருட சென்றுள்ளார்.

அதிகாலை 4:00 மணி அளவில் திருடச்சென்ற சூரி பாபு மிகவும் களைப்பாக உணர்ந்துள்ளார். இதனையடுத்து தான் திருடச்சென்ற வீட்டில் ஏசி காற்று இதமாக வீசியதால் அசதியில் சூரி பாபு அங்கேயே அசந்து தூங்கியுள்ளார். 

அதுவும் வீட்டின் உரிமையாளர் கட்டிலின் மேல் படுத்திருக்க, கட்டிலுக்குக் கீழே சூரி பாபு படுத்து தூங்கியுள்ளார். வீட்டின் உரிமையாளர் எழுவதற்கு முன் தான் எழுந்து சென்று விடலாம் என நினைத்த சூரி பாபு அசதியில் குறட்டை விட்டு தூங்கி உள்ளார்.

குறட்டை சத்தம் கேட்டு கண்விழித்த வீட்டின் உரிமையாளர் கீழே ஒருவர் படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அறைக்கதவை வெளியே பூட்டிவிட்டு, இதுகுறித்து போலீசாருக்கு வீட்டின் உரிமையாளர் ரெட்டி தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் ரெட்டியின் வீட்டிற்கு வந்துள்ளனர். தான் அறைக்குள் வைத்து பூட்டப்பட்டு இருப்பதை உணர்ந்த திருடன் அறையின் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு வெளியேவர அடம் பிடித்துள்ளார். இதனையடுத்து போலீசார் திருடனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வெளியே வர வைத்து கைது செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சூரி பாபுவிற்கு திருட்டில் முன் அனுபவம் இல்லை என கூறியுள்ளனர். மேலும் திருட முயன்ற குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனனர்.


Advertisement