சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட ஏழை ரிக்‌ஷா ஓட்டுனர்! ஒரே இரவில் பல லட்சத்திற்கு அதிபதி!

சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட ஏழை ரிக்‌ஷா ஓட்டுனர்! ஒரே இரவில் பல லட்சத்திற்கு அதிபதி!


riksha driver won 50 laks


மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கவுர் தாஸ். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வரும் இவர் தனது தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அவர் சம்பாதிக்கும் பணம் போதாததால் அவரின் தாயும், மனைவியும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிலிருந்து தாஸ் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது லாட்டரி சீட்டு விற்கும் நிலையம் வந்தது. அந்த நிலையத்தை நடத்துபவர் தாஸிடம் லாட்டரி சீட்டு வாங்கிகொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால் தன்னிடம் வெறும் 70 ரூபாய் மட்டுமே இருப்பதாக தாஸ் கூறி எதற்கும் ஒன்னு வாங்கி பார்ப்போம் என்ற மனநிலையில் ரூ 30 கொடுத்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு ஏதேனும் விழுந்ததா என தெரிந்துகொள்ள கடைக்கு சென்றுள்ளார். ஆனால் தாஸிற்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

rikshaw driver

அதாவது முதல் பரிசான ரூ 50 லட்சம் அவருக்கு லாட்டரியில் விழுந்ததை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தாஸ் உடனடியாக வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதை கூறினார். குடும்பமே மகிழ்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து அவர் கூறுகையில், லாட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து புதிய வீடு கட்டுவேன், என் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.