சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் திடீர் சோதனை! சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு!

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் திடீர் சோதனை! சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு!


ride in bangaluru jail


சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருபவர் சசிகலா, அந்த  சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஏராளமான கத்திகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிறை துறை அதிகாரி கூறுகையில், இது வழக்கமான ரெய்டு தான், சிறைசாலையில் பலர் விதிமுறைகளை மீறி பொருட்கள் வைத்திருப்பதாக கூறப்பட்டது. சிறையில் உள்ள கைதிகளின் அறைகள், முக்கிய ரவுடிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சில கைதிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.

bengaluru

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அறையிலும் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதில் சசிகலாவிடம் செல்போன் கைப்பற்றப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளனர் அதிகாரிகள்.