வளர்ப்பு நாய்க்கு சரக்கு கொடுத்து கர்ணன் போல பெருமிதம்: வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய இளைஞர்.!

வளர்ப்பு நாய்க்கு சரக்கு கொடுத்து கர்ணன் போல பெருமிதம்: வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய இளைஞர்.!


Rajasthan Man May Be Arrest by Cops After his Dog Drink Alcohol Video Viral 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மோடோபூர் பகுதியை சேர்ந்தவர் சேரு போர்டா (Sheru Borda). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கிறார். 

அப்போது, இவர்களுடன் சேருவின் வளர்ப்பு நாயும் இருந்த நிலையில், ஒரு கிளாசில் ஊற்றி வைக்கப்பட்ட மதுவை நாயும் ருசி பார்த்தது. இதுகுறித்த காணொளியை பதிவு செய்த இளைஞர்கள், அதனை பெருமையாக தங்களின் இணையப்பக்கத்தில் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்களிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து. இதனால் தற்போது சேருவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதுபானம் நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்ற விழிப்புணர்வு மனிதர்களிடம் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில ஆர்வக்கோளாறு இளைஞர்களால் வளர்ப்பு பிராணிகள் வரை மதுப்பழக்கம் கொண்டு சேர்க்கப்படுகிறது.