இரண்டு நாளுக்கு முன்பே எடுத்த முடிவு! குழந்தைகளை பார்த்ததும் மாறிய மனசு...! கணவன், மனைவி வீட்டின் வெவ்வேறு அறையில் சடலமாக மீட்பு! சிக்கிய தற்கொலை கடிதம்... அதிர்ந்து போன போலீஸ்..!!!



rajasthan-dhaulpur-couple-found-dead

ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூரில் காப்பீட்டு நிறுவன மேலாளர் பால்ராம் மீனா (37), அவரது மனைவி ஆகியோர் வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். வெவ்வேறு அறைகளில் இருவரது உடல்களும் கிடந்தன. தகவலறிந்து சென்ற போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பால்ராம் மீனா தனது நண்பருக்கு கடைசியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சில தகவல்களை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் தம்பதி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் நடக்குமா? கோழிக்கறி சமைப்பதில் கணவன்- மனைவிக்கு ஏற்பட்ட மோதல்! அருகில் இருந்த 6 வயது சிறுமி பரிதாப மரணம்..! நடந்தது என்ன? பகீர் சம்பவம்..!!!!

‘இறுதி ஜோஹார்’ என பதிவிட்ட கடைசி ஸ்டேட்டஸ்

பால்ராம் சம்பவத்துக்கு முன்பு தொடர்ந்து 3 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பதிவிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு பதிவுகளில் அவர் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், கடைசி பதிவில் “இறுதி ஜோஹார்” என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பதிவுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டைரியில் இருந்த அதிர்ச்சி தகவல்

போலீசாருக்கு கிடைத்த பால்ராமின் டைரியில், செப்டம்பர் 26-ம் தேதியே இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அந்த முடிவை கைவிட்டதாகவும் அவர் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. தனது தாய், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்காகவும் தனித்தனியாக சில தகவல்களை அவர் பதிவு செய்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை

சம்பவம் நடந்த நேரத்தில் பால்ராமின் 4 வயது மகனும், அவரது சகோதரரின் மகனும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். மேலும், செப்டம்பர் 21-ம் தேதி முதல் பால்ராம் அலுவலகத்துக்குச் செல்லவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களில் அவரது நடவடிக்கைகள், குடும்ப சூழல், டைரியில் உள்ள குறிப்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி உயிரிழந்ததற்கான முழுமையான காரணம், விசாரணை முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: ஐயோ இதுக்கெல்லாமா இப்படி பண்றது! சாவை தேடிப்போன 10 ஆம் வகுப்பு மாணவி! கதறும் குடும்பத்தினர்...!!!