இந்தியா

ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Summary:

Rajasthan 5 years old save from bore well video

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததும், சிறுவனை மீட்க 5 நாட்களாக நடந்த போராட்டம் வீணாகி இறுதியில் சுஜித்தை அழுகிய நிலையில் பிணமாக மீட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுஒருபுரம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீண்டு குழுவினர் சுமார் 8 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இந்நிலையில் அந்த சிறுவன் மீட்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த காட்சி.


Advertisement