லாபத்தை தனியாருக்கும், நஷ்டத்தை அரசாங்கத்திற்கும் கொடுக்கும் மத்திய அரசு.! ராகுல்காந்தி

லாபத்தை தனியாருக்கும், நஷ்டத்தை அரசாங்கத்திற்கும் கொடுக்கும் மத்திய அரசு.! ராகுல்காந்தி



rahul talk about central Government

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க உள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தநிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

அதாவது நேற்றும், இன்றும் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான கிளைகள் நேற்று மூடியே கிடந்தன. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பணப்பரிமாற்றங்கள், காசோலை பரிமாற்றங்கள் என அனைத்துவிதமான சேவைகளும் முடங்கின.


இந்நிலையில், வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ராகுல்காந்தி வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், "மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது மற்றும் நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது. வேலைநிறுத்தம் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.