அரசியல் இந்தியா

ஏழைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மாதம்தோறும் ரூ.6000 ; ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு.!

Summary:

rahul gandhi - poor family announced - monthly rs.2000

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழை  குடும்பங்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் சிலவற்றில் ஏழை குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரசு நிதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது அந்த திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த உள்ளதாக ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

மாத வருமானம் 12000 க்கும் குறைவாக பெரும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனடைய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு இந்த நிதி உதவியை அளித்தால் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கிடைக்கும் நிலை உருவாகும்.

இதனால் நாடு முழுவதும் சுமார் ஐந்து கோடி குடும்பங்கள் உட்பட 25 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த மக்கள் தொகையில் 20% என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு அனைத்து ஏழை மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்களின் இந்த மகிழ்ச்சி நிலைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement