வெள்ளத்தில் சிக்கிய 35 பள்ளி மாணவிகள்! உடலையே பாலமாக மாற்றி 2 வாலிபர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரலாகும் வீடியோ!



punjab-flood-youths-rescue-school-girls

மனிதநேயமும், உதவி மனப்பான்மையும் குறைந்து விட்டதாக பலர் நம்பும் நிலையில், பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தின் மல்லேயன் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரது மனத்தையும் நெகிழச் செய்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 35 மாணவிகள் சிக்கிக்கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்த வேளையில், மாணவிகள் பயத்தில் கத்திக் கொண்டிருந்தனர்.

இந்த தகவலை அறிந்த சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் என்ற இரு வாலிபர்கள், எந்த தயக்கமும் இல்லாமல் ஓடி வந்து, கிராம மக்களின் உதவியுடன் மாணவிகளை மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளி அருகேயுள்ள பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், அவர்கள் உடலையே பாலமாக மாற்றி, மாணவர்கள் அதன் மீது ஏறிச் செல்லும் வகையில் பாதுகாப்பாக வெளியேறும் வழியை ஏற்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: ஐயோ என்னோட செல்போன்.! கண்ணீரோடு தண்ணீரில் இறங்கி தேடிய ஏழை வாலிபர்! கலங்க வைக்கும் வீடியோ.

இந்த மனிதநேய செயல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. இந்த இரு வாலிபர்களை மல்லேயன் கிராம பஞ்சாயத்து சிறப்பு அமர்வில் கௌரவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயல், “இன்னும் இந்த நாட்டில் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது” என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு உதாரணம்.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. இப்படியா நடக்கணும்! கம்ப்யூட்டர் கிளாஸ் சென்ற 2 மகள்கள்! பெற்றோருக்கு வந்த வாய்ஸ் நோட்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பகீர் பின்னணி..