பணத்திற்கு ஆசைப்பட்டு அம்மா, சகோதரியை... நவ்ஜோத் சிங் சித்துவின் சகோதரி பகீர் பேட்டி..! அரசியலில் பரபரப்பு.!!



Punjab Congress Leader Navjot Singh Sidhu Sister Shocking Pressmeet

கிரிக்கெட் வீரராக இருந்து, பின்னாளில் அரசியல்வாதியாக மாற்றம் அடைந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். நவ்ஜோத் சிங் சித்து குறித்து அவரின் மூத்த சகோதரியான சுமன் தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது அரசியல் மட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வரும் சுமன் தூர், சத்தீஸ்கர் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 1986 ஆம் வருடம் தந்தையின் மரணத்திற்கு பின்னர், சொத்துக்களை கைப்பற்றிய நவ்ஜோத் சிங் சித்து, எனது தாயையும் என்னையும் அடித்து வெளியே விரட்டிவிட்டார். தந்தையின் மரணத்திற்கு பின்னர் அவரது பென்சன் தொகை, பணம், வீடு போன்றவற்றை அவர் அபகரித்துக்கொண்டார். 

punjab

பணத்திற்காக என்னையும், எனது தாயையும் தெருவில் நிறுத்தினார். கடந்த 1989 ஆ வருடம் எனது தாயாரும் மன வருத்தத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், நான் பல கஷ்டங்களை அனுபவித்தேன். எனது தாயார் நான்கு மாத மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் பரிதாபமாக இரயில் நிலையத்தில் உயிரிழந்தார். நான் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. நவ்ஜோத் சிங் சித்து கொடூரமானவர். 

எனக்கு 2 வயதாக இருக்கும் போது பெற்றோர்கள் பிரிந்து சென்றுவிட்டனர் என சித்து ஊடகத்தில் பேசி வருகிறார். பெற்றோர் குறித்து சித்து கூறியது தவறானது. நான் சிந்துவை பார்க்க வருகிறேன் என கூறி வந்த நிலையில், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி வீட்டிற்கு சென்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரின் வேலைக்காரர்கள் என்னை விரட்டி அடித்தனர். எனக்கு 70 வயதாகும் நிலயில், குடும்பத்தினர் குறித்து சித்து அவதூறு பரப்புவது வேதனையை அளிக்கிறது. எனது தாய்க்கு நீதி வேண்டும். எனக்கு பணம், பொருள் என எதுவும் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, "கணவரின் தந்தைக்கு 2 குடும்பம் இருப்பது மட்டும் எனக்கு தெரியும். அவர்களை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது" என்று தெரிவித்தார்.