இந்தியா

தங்கத்தால் செய்யப்பட்ட கொரோனா மாஸ்க்குடன் வலம்வரும் இந்தியர்..! அந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா..? அடேங்கப்பா..!

Summary:

Pune man wears gold mask worth Rs 2.89 lakh to protect himself from coronavirus

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க சுமார் 2.89 லட்சம் செலவு செய்து தங்கத்தால் ஆன மாஸ்க்கை அணிந்துள்ள சம்பவம் இணையத்தில் வைராலகிவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணிந்து, அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவருகிறார்.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்கநகைகள் அணிவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர், எப்போதும் தனது உடலில் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்துகொண்டு சுற்றிவரும் இவர் தற்போது 2.89 லட்சம் செலவு செய்து தங்கத்தால் ஆன முகக்கவசம் ஒன்றை செய்து அதனை அணிந்துள்ளார்.

தங்க முகக்கவசத்தின் இடையில் காற்றோட்டத்திற்காக சிறு சிறு துளைகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஷங்கர் குரேட், இந்த துளைகள்தனக்கு காற்றோட்டத்திற்கு உதவுமே தவிர இந்த முகக்கவசம் கொரோனாவில் இருந்து தப்பிக்க உதவுமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.


Advertisement